திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மது போதையில் தாயாரிடம் தகராறு செய்த தந்தையை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைடுத்த கல்லுகடை வீட்டைச் சேர்ந்தவர் ரவி. இவர் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இதனால் சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் மனைவி வேலை செய்யும் இடத்திற்கே சென்று பிரச்சினை செய்துள்ளார்.
இது தொடர்பாக இவருக்கும் அவரது இளைய மகன் சுதாகரன் ஆகியோருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது உருட்டு கட்டையால் தந்தையை தாக்க, தலையில் தாக்கப்பட்ட ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தாக்கிய அவரது மகன் சுதாகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.