Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எனக்கு கல்யாணம் பண்ணி வை… தொந்தரவு செய்த வாலிபர்… தலையில் கல்லை போட்டு கொன்ற தந்தை….!!

திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரை அடிக்கடி தொந்தரவு செய்த மகனை தந்தை தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.

மதுரை மாவட்டத்திலுள்ள வடிவேல்கரை மேற்குத் தெருவில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரவன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கதிரவனுக்கு திருமணம் ஆகாத காரணத்தால் அடிக்கடி மது அருந்திவிட்டு தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதோடு தனது பெற்றோரிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சாமிநாதன், கதிரவன் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது, தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து பலத்த காயமடைந்த கதிரவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து சந்திரசேகர் என்பவர் அளித்த புகாரின் பேரில் சுவாமிநாதனை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் மருத்துவமனையில் கதிரவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |