கோவை அருகே கள்ளக்காதலனுடன் நெருங்கி பழக தடையாக இருந்த குழந்தையை பெற்ற தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் கோவில் மேடு ஏரியாவில் வாடகை வீட்டில் வசித்து வந்த திவ்யா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து காலி செய்து தனது இரண்டு குழந்தைகளுடன் துடியலூர் தொகுதிக்கு குடிபெயர்ந்து வசித்து வந்தார். அங்கு அவருக்கும் ராஜதுரை என்ற நபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வர திவ்யாவின் மூத்த மகனான அபிஷேக் திடீரென மயங்கி விழுந்ததாக கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து உடலில் இருக்கும் காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரிடமும் விசாரணை மேற்கொள்கையில், நானும் ராஜதுறையும் , கணவன் மனைவி இல்லை.
ஆனாலும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதன் காரணமாக உல்லாசம் அனுபவித்து வந்தோம். இதற்கு எனது இரண்டு குழந்தைகளும் தடையாக இருந்தனர். அதிலும் மூத்த மகன் அபிஷேக் ராஜதுரையிடம் நீ என் அப்பா இல்லை, வெளியே போ என்று கடுமையாக பேசியதுடன், எங்களை தனிமையில் இருக்க விடாமல் தொந்தரவு செய்து வந்தான். இதனால் ஆத்திரத்தில் அவனுக்கு சூடு வைத்து, சப்பாத்தி கட்டையால் கடுமையாக தாக்கினோம். அதில் திடீரென அவன் மயங்கி விழுந்து விட்டான் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.