உயிருடன் புதைக்கப்பட்ட தாய் மூன்று நாட்களுக்குப்பின் உயிருடன் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் Shannxi என்னும் மாகானத்தில் என்ற Zhang பெண் தனது மாமியாரை காணவில்லை எனவும் அவரை தனது கணவர் Ma சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்து சென்றதாகவும் பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து Maவை காவல்துறையினர் விசாரித்ததில் அவர் தன் தாயை உயிருடன் ஒரு இடத்தில் புதைத்து விட்டதாக உண்மையை கூறியுள்ளார்.
அவர் கூறிய இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஓர் இடத்தில பெண்ணொருவர் முனகும் சத்தம் கேட்க அந்த இடத்தை தோண்ட ஆரம்பித்துள்ளனர். பின்னர் Zhang-இன் 79 வயதான மாமியார் Wang உயிருடன் மீட்கப்பட்டார். மூன்று நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்டவர் உணவு, தண்ணீர் இல்லாமல் உயிருடன் மீட்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Ma கைது செய்யப்பட்டு கொலை முயற்சி குற்றச்சாட்டு அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.