திண்டுக்கல்லில் சொத்துக்காக பெரியப்பாவை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அழகாபுரி கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் மாசானம். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவருக்கும் இவரது தம்பி மகனான பழனிச்சாமி என்பவருக்கும் நீண்ட வருடங்களாக சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் அவ்வப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்படும். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் சண்டையிட தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி கட்டையை எடுத்து மாசானத்தை சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு இருந்து அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் எவ்வித பலனும் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின் இதுகுறித்து காவல் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவரது உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு கொலை செய்த பழனிச்சாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.