Categories
மாநில செய்திகள்

“சொத்து தகராறு” டார்ச் லைட்டால் தந்தையை கொன்ற மகன்…. போலீஸ் விசாரணை….!!

சொத்து தகராறில் டார்ச்லைட் வைத்து தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் உள்ள போலீஸ் சரக பகுதியில் உள்ளது தூதை என்னும் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் மலையாளம். இவருடைய மகன் பெயர் சங்கையா. கூலி தொழிலாளியான இவருக்கும் தந்தைக்கும் சொத்து பிரிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று தந்தை மலையாளம் குடித்துவிட்டு வந்து தன் மகனிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சங்கையா டார்ச் லைட்டால் தன் தந்தையை பயங்கரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மலையாளம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தந்தையை கொலை செய்த மகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Categories

Tech |