நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் பாஜகவின் MP வீரேந்திரகுமாரை மக்களவையின் இடைக்கால சபாநாயகராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து பிரதமர் மோடி , ராஜ்நாத்சிங் உள்பட 313 பேர் MP-யாக பதவியேற்ற நிலையில் மீதம் இருந்த MP-க்கள் இன்று பதவி ஏற்றனர். இதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இன்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. சார்பில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் டி. ராஜா மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தனர்.