Categories
அரசியல் தேசிய செய்திகள்

சோனியா காந்தி, ராகுல் காந்தியை இன்று மாயாவதி சந்திக்கமாட்டார்.!!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங். தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க மாட்டார்  என  எஸ்.சி மிஸ்ரா கூறியுள்ளார். 

மக்களவை தேர்தல் 7 கட்டமாக அறிவிக்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. வாக்கு பதிவு வருகிற 23-ந்தேதி எண்ணப்பட்டு   நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிந்த பின் நடத்தப்பட்ட  கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.கவுக்கு அதிக   இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவதாக இருந்தது.  இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரங்கள் பற்றி  பேசப்படும் என பரவலாக தகவல்கள் வெளியாகின.

Image result for Mayawati
இந்த நிலையில், சோனியா காந்தி மற்றும்  ராகுல் காந்தியை இன்று மாயாவதி சந்திக்க மாட்டார் என்று பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி எஸ்.சி மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் வேறு எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் மாயாவதி இன்று சந்திக்கமாட்டார்,  லக்னோவில் தான்  மாயாவதி இருப்பார் என்றும் எஸ்.சி மிஸ்ரா கூறினார்.

Categories

Tech |