Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடு திரும்பினார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பரிசோதனையில் அவரது வயிற்றில் நோய் தொற்று இருப்பது தெரிய வந்தது.

அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தநிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக  மருத்துவமனை தலைவர் டாக்டர் ரானா தெரிவித்தார்.

மேலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து  டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி வீடு திரும்பினார். தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவமனை சார்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |