மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ சோதனைக்காக அவர் அங்கு 2 வாரங்கள் தங்கி பரிசோதனைகளை முடித்து கொண்டு அதன் பின்னர் இந்தியாவுக்கு திரும்புகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
சோனியா காந்தியின் இந்த மருத்துவ பரிசோதனைக்கான பயணத்தில் அவருடன் மகன் ராகுல் காந்தியும் சென்றுள்ளார். அடுத்த வாரம் இறுதிக்குள் ராகுல் காந்தி நாடு திரும்பிய பின்னர், நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.