Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொன்ன சம்பளம் கொடுக்கல… பணியும் வழங்கவில்லை…. செவிலியர்கள் போராட்டம் ..!!

சென்னையில் ஊதியம் தரவில்லை என்று கூறி டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளில் பணி புரிகின்ற செவிலியர்கள் 52 பேர். 15 மண்டலங்களிலும் கொரோனா தடுப்பு சிகிச்சை பணிக்காக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய நிலையில், சுகாதார அலுவலர்கள் உறுதி கூறியபடி, தங்களை பணி நிரந்தரம் செய்யாத காரணத்தால் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் டிஎம்எஸ் வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து சென்ற மே மாதம் முதல் சென்னையில் பணியாற்றி கொண்டிருக்கும் எங்களுக்கு தற்போது வரை ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் பணி நிரந்தர ஆணையும் வழங்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்க அலுவலர்கள் செல்வவிநாயகம் மற்றும் சித்ரா போன்றோருடன் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அத்தகைய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தால் செவிலியர்கள் அனைவரும் அலுவலக வாயிலில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |