Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொன்னதைச் செய்வார்…. ஒரு மணி நேரத்தில் சதம் என்றால் சதம்தான்…. இந்திய பேட்ஸ்மேனை புகழ்ந்து தள்ளிய பாலாஜி….!!

ஒரு மணி நேரத்தில் சதம் அடிப்பேன் என சொன்னதை செய்து காட்டிய இந்திய பேட்ஸ்மேன் எல்.பாலாஜி புகழ்ந்து பேசியுள்ளார்.

நேரலையில் யூடியூப் சேனலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் எல்.பாலாஜி பேசியபோது பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். முக்கியமாக பேட்ஸ்மேன் பத்ரிநாத் குறித்த சுவையான நினைவுகள் அது.” யாராவது விளையாட்டாக நான் சதம் அடிக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு களத்தில் இறங்குவதை பார்த்து இருக்கிறீர்களா நான் அதை 2005 ஆம் ஆண்டில் பார்த்தேன். அவர்தான் பத்ரிநாத் பல்வேறு காலகட்டத்தில் பத்ரிநாத்தை பல கோணங்களில் பார்த்திருக்கிறேன் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் இவர்” என்றார்.

ஒரு பேட்டியில் ஒரு மணிநேரத்தில் சதம் அடிக்கிறேன் என சொல்லிவிட்டு களமிறங்கினார் சுழல் பந்துவீச்சாளர்கள்பந்து வீசிக்கொண்டிருந்தனர், இருப்பினும் சொன்னதுபோலவே செய்தார் அது மட்டுமல்ல அந்த பௌலர் பந்துவீச்சில் இத்தனை ரன்கள் தான் குவிப்பேன் என்று சொன்னார் பத்ரிநாத்” என ஆச்சரியத்துடன் கூறினார் . மேலும் “பத்ரிநாத் டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல டி20 போட்டிகளையும் தன்னால் விளையாட முடியும் என ஐபிஎல் தொடரில் நிரூபித்தார் பேட்டிங் நுட்பத்தில் பத்ரிநாத் மிகவும் புத்திசாலி அவரின் விக்கெட்டை எளிதில் வீழ்த்த இயலாது. ரஞ்சிப் போட்டியில் ஒரு பாதியில் சதம் அடிக்க முடியும் என நிரூபித்தவர்” என்று நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார் பாலாஜி.

Categories

Tech |