ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால், மும்பை அணியில் இடம்பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர்.
14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்குபெற்ற, வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதற்கு முன்பாகவே நியூசிலாந்து வீரர்கள் டோக்கியோ வழியாக சொந்த நாட்டிற்கு சென்றுள்ளனர் .இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்ற டிரென்ட் போல்ட், உட்பட வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் ,அவரவர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதுபற்றி டிரென்ட் போல்ட் தன்னுடைய இன்ஸ்டாகிராமில், வீரர்களை அனைவரையும் பாதுகாப்பாக சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்த, மும்பை அணிக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் தற்போது கொரோனா தொற்றால், இந்திய மக்கள் பாதிக்கப்படும்போது , இதனுடன் எதையும் ஒப்பிட முடியாது என்றும், இந்திய ரசிகர்களிடம் ,நான் பேராதரவை பெற்றுள்ளதாகவும் கூறினார். இது ஒரு துயரமான சம்பவம் என்றும், கூடிய விரைவில் இந்நிலை நிச்சயம் மாறும் என்று நம்புகிறேன்,என்று அவர் தெரிவித்துள்ளார்.