Categories
சினிமா தமிழ் சினிமா

பூதக்கோலா திருவிழா: சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று…. சுவாமி தரிசனம் செய்த நடிகை அனுஷ்கா….!!!!

திரையுலகில் தற்போது வரை பரபரப்புடன் பேசப்படும் திரைப்படம் “காந்தாரா”. இந்த படத்தில் ரிஷப் செட்டி கதாநாயகனாக நடித்து இயக்கியிருந்தார். இப்படம் கன்னட மொழியில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளி குவித்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பூதக்கோலா உள்ளூர் தெய்வ வழிபாடு குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா தன் சொந்த ஊரான மங்களூரில் நடைபெற்ற பூதக்கோலா திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இதற்கிடையில் அனுஷ்கா நிசப்தம் திரைப்படத்திற்கு பின் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இதனால் அவரை வெளியே எங்கேயும் பார்க்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது பூதக்கோலா திருவிழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார்.

Categories

Tech |