கொரோனா பரிசோதனையில் தனக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்று நடிகர் சோனு சூட் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சோனு சூட் நடிப்பை தாண்டி பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோனு ஷூட்டிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் அவர் சமூக சேவையை தொடர்ந்து ஆற்றி வந்தார். இந்நிலையில் நடிகர் சோனு சூட் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அதில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதனை மகிழ்ச்சியுடன் அவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/COAX775ATZJ/?igshid=1n5rtotlrp6md