கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க சிறிய பாக்கெட் ஏசியை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சோனி நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பாக்கெட் ஏசியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கொளுத்தும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஸ்மார்ட்போனை விட சிறிய ஏசியை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது . சட்டைக்குள் அணியக் கூடிய வகையில் எஸ், எம் , எம் ஆகிய சைஸ்களில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட டீசர்ட்களில் அதனில் குட்டி ஏசியை வைப்பதற்கு தேவையான பாக்கெட்டும் இருக்கும் என்றும் இதை அணிந்து அதற்கு மேல் மேல்ச்சட்டையை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது .
அதன்பின் , ஜில்லென்ற காற்று ஆடைக்குள்ளே உலவிக் கொண்டிருக்கும். இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். மேலும் , ஏசியன் கூலிங்க் கன்ட்ரோலை ஸ்மார்ட்போன் மூலம் கட்டுப்படுத்தலாம் . பாக்கெட் ஏசியை இரண்டு மணி நேரம் சார்ஜ் போட்டால் ஒன்றரை மணி நேரம் இந்த பாக்கெட் ஏசியை பயன்படுத்தலாம் . இந்த ஏசியை சோனி நிறுவனம் இந்திய ரூபாய் மதிப்பில் 8 ஆயிரத்து 992 ரூபாய் மதிப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது.