சட்டவிரோதமாக சூதாடி கொண்டிருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து 6 பேர் சூதாடி கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்கள் 6 பேரையும் மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் பாலசுந்தரம், ஆறுமுகம், நாகூர் மீரான், டேனியல் ராஜ், செந்தில், ராமமூர்த்தி ஆகியோர் என்பதும் அவர்கள் அங்கு பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ரூ.30 ஆயிரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.