சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் காவல்துறையினருக்கு உப்பு பாளையம் ரோடு நூலகம் அருகில் பணம் வைத்து சூதாடியதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நூலகத்திற்கு பின்புறம் பணம் வைத்து 7 பேர் கொண்டிருந்தனர்.
இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடிவேல், அர்ஜுனன், வேலுச்சாமி, வினோத், ராஜேஷ், சிவகுமார், சரவணன் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 7 பேரையும் கைது செய்ததோடு, அவர்கள் வைத்திருந்த 9240 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.