சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெயக்காரன்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காங்கேயம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டாஸ்மாக் கடை இருக்கும் பகுதிக்கு அருகில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் தாமோதரன், முருகேசன், கார்த்திக், குமார், சுரேஷ், நாகரத்தினம், வையாபுரி, தங்கவேல் ஆகியோர் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 8 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த ரூ.4640-யும் பறிமுதல் செய்தனர்.