பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்துகிருஷ்ணாபுரம் கல்லறைத் தோட்டம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் ஜிந்தா, சுந்தர்ராஜ், சரத்பாலா, ராஜா, செந்தில், ஆவுடை சங்கு, யோகராஜ், சுப்பிரமணியன், பூமிநாதன், சோமசேகரன், பச்சிராஜ், சந்தன ராஜ், பால்ராஜ், வள்ளி முத்து ஆகியோர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 14 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த ரூ.35 ஆயிரத்து 250-ஐ பறிமுதல் செய்தனர்.