சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் ரேஷன் கடை பின்புறம் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பல்லடம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 6 பேர் அப்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மாதப்பூர் பகுதியில் வசிக்கும் கார்த்தி உட்பட 6 பேர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்தி உள்பட 6 பேரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்த ரூ.10,500-யும் பறிமுதல் செய்தனர்.