சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் காவல்துறையினருக்கு சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் அங்குள்ள தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாஸ்கர், கதிர்வேல், முருகானந்தம், சபரிஷ், விஸ்வநாதன், பிரகாஷ், ராஜேஸ்வரன் மற்றும் செந்தில்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 8 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த ரூ.2 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.