சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் பகுதியில் காவல்துறையினர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் பெருமாநல்லூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை பார்த்த காவல்துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 9 பேரை மடக்கி பிடித்து கைது செய்ததோடு அவர்களிடமிருந்த ரூ. 1,70,100-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.