வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த படம் மங்காத்தா. இந்த படத்தில் அஜித் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வெங்கட் பிரபு எங்கு சென்றாலும் அஜித்துடன் அடுத்த படம் எப்போது என்று கேட்டுவந்துள்ளனர். அதற்க்கான பதிலை தற்போது வெளியிட்டுள்ளார்.
தற்போது அதற்க்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் உறுதியாகிவிடும் என்று கூறியுள்ளார். இந்த படம் மங்காத்தா 2 ஆக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அஜித்தை சந்ததித்த போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.