அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் 5 ஆவது சக்திவாய்ந்த சூறாவளியினால் பெய்துவரும் கன மழையை முன்னிட்டு அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 5 ஆவது சக்தி வாய்ந்த சூறாவளியாக கருதப்படும் ஐடாவினால் அந்நாட்டிலுள்ள பல மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனையடுத்து சூறாவளியினால் பெய்த கன மழையினால் கிட்டத்தட்ட 42 பேர்கள் பலியாகியுள்ளார்கள். இதிலும் குறிப்பாக அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரம் ஐடா சூறாவளியினால் பெய்த கன மழையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயார்க் நகரத்தின் மேயர் கூறியதாவது, நியூயார்க் நகரம் வரலாறு காணாத கனமழையை சந்தித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்நகரத்தில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டதோடு மட்டுமின்றி மின்சார சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.