Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சூரரைப் போற்று பட பாணியில்… குறைந்த விலையில்… “ஹெலிகாப்டர் சுற்றுலா”..!!

சூரரைப்போற்று பட பாணியில் கிராம மக்களை வானொலி பயணத்தை அழைத்து சென்ற கல்லூரி பொறியியல் மாணவரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நிர்வாகம் சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை ஹெலிகாப்டர் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஒவ்வொரு நபருக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான வைகை பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது.

இந்த கல்லூரியும் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனமும் இணைந்து மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தையும் பொதுமக்கள் வான்வழியாக கண்டுகளிக்க குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயணம் செய்ய இன்று முதல் தொடங்கியுள்ளது. நபருக்கு 6 ஆயிரம் வீதம் ஆறு பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த ஹெலிகாப்டரில் அழகர்கோயில், யானைமலை, ஒத்தகடை, தெப்பக்குளம், மாரியம்மன் கோயில், கீழ்குயில்குடி உள்ள புராதன சின்னங்கள் ஆகியவற்றை 15 நிமிடங்களில் கண்டுகளிக்கலாம்.

இந்த சேவை 24ம் தேதி முதல் 27ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பின் நாட்களில் பயணிகளின் வருகையை பொருத்து பயணம் மேற்கொள்ளப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. விமான நிலைய ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்ற இந்த வானொலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்ய புதுமண தம்பதிகள் தங்களுக்கு வான்வெளிப் பயணம் புதிய அனுபவமாக இருந்ததாக மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |