செக் குடியரசில் வீசிய பலத்த சூறைக்காற்றினால் 5 பேர் உயிரிழந்ததோடு மட்டுமல்லாமல் 100 க்கும் மேலானோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செக் குடியரசு நாட்டில் பலத்த சூறைக்காற்று வீசியுள்ளது. இந்த சூறைக்காற்றால் ஹோடோன் பகுதியை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சூறைக் காற்றினால் 5 பேர் உயிரிழந்ததோடு மட்டுமின்றி 100 க்கும் மேலானோர் காயமடைந்துள்ளார்கள்.
இதனையடுத்து இந்த சூறைக் காற்றினால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் காரின் மேல் விழுந்து செக் குடியரசில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.