Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீசிய பலத்த சூறைக்காற்று…. கடலுக்கு செல்லாத மீனவர்கள்…. வெறிச்சோடி கிடந்த கடற்கரைகள்….!!

வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வனவன் மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த மீனவ கிராமங்களில் மீனவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட விசைப் படகு மற்றும் சைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

மேலும் கோடியக்கரையில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க காலை மற்றும் மாலையில் கடலுக்கு செல்வார்கள். இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். எனவே மீனவர்கள் தங்களது வலைகளில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரைகள் வெறிச்சோடிக் கிடந்தன.

Categories

Tech |