Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட சூறைக்காற்று…. 3-ஆவது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த 14-ஆம் தேதி பலத்த சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமணல், கூட்டப்புளி, கூத்தங்குளி, இடிந்தகரை உள்பட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 8000 நாட்டு மீனவர்கள் 3-வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை.

இதனால் கடற்கரையில் 2000 நாட்டுப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர், வேம்பார், தருவைகுளம், திரேஸ்புரம், இனிகோ நகர், தெர்மல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 விசைப்படகுகளுக்கு சொந்தமான 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |