அடுத்தடுத்து வீசிய மூன்று சூறாவளியால் அமெரிக்காவில் உள்ள 2 மாகாணங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
அமெரிக்கா நாட்டில் அலபாமா லூசியானா மற்றும் மிசிசிபி என்ற மாகாணங்கள் அமைந்துள்ளன. இந்த மாகாணத்தில் திடீரென சூறாவளி மற்றும் புயல் காற்று வீசியதால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மேலும் மத்திய அலபாமா பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று சூறாவளிகள் தாக்கியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனையடுத்து சூறாவளி காற்றில் சிக்கிய நடமாடும் வீடு ஒன்று அப்படியே தலைகீழாக கவிழ்ந்து நாட்டியம் ஆடியது. அதோடு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.