நாகையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை நெற்கதிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து கடைமடை விவசாயிகள் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்தனர். ஏக்கர் ஒன்றுக்கு 40 முட்டைகள் வரை அறுவடை செய்யலாம் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். ஆனால் நேற்று முந்தினம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக செல்லூர், பாலையூர், சங்கமங்கலம், பெருங்கடம்பனூர், இளம்கடமனூர், வடகுடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குருவை நெற்கதிர்கள் சேதமடைந்தன.
இதனால் ஏக்கருக்கு 10 மூட்டைகள் கூட அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் தற்போது பெரும் இழப்பை சந்தித்து இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.