சூறாவளியின் பொழுது வீசும் பலத்த காற்றை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் challenergy என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் விசேஷமான காற்றாலை ஒன்றை உருவாக்கியுள்ளது. அதாவது சூறாவளி, புயல் போன்ற பேரிடரின் போது வீசும் பலத்த காற்றுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இந்த காற்றாலைகள் காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் தயாரிக்குமாம். அதிலும் சாதாரண காற்றாலைகளில் உபயோகப்படுத்தப்படும் பெரிய பிளேடுகள் பலத்த காற்று வீசும் பொழுது பழுதாகின்றன. இவைகள் காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களினால் சேதமடைவதில்லை. குறிப்பாக ஒரு வருடத்திற்கு சராசரியாக 26 தடவை சூறாவளி வீசுகிறது என்று ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.