சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பலால் ஒரு மணி நேரத்திற்கு 2,900 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் ஆசியாவின் மத்தியதரைக் கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர் வழித்தடமாக திகழ்கிறது சூயஸ் கால்வாய். 400 மீட்டர் நீளமும் 2,00,000 டன் எடையும் கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல் ஒன்று இந்த கால்வாயில் சிக்கி உள்ளது. இந்த கப்பலை எவ்வளவு சீக்கிரம் மீட்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீட்டு விட வேண்டும். அப்படி இல்லயென்றால் உலக பொருளாதாரமே ஸ்தம்பிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே அந்த கால்வாயில் குறுக்கே சிக்கிக்கொண்ட கப்பலின் உரிமையாளர் ஷோயேய் கிசேன் சர்வதேச வர்த்தகத்திற்கு இழப்பை ஏற்படுத்திய இந்த தடங்கலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.கால்வாயின் மணலிலிருந்து பிரம்மாண்ட கப்பலை வெளியே கொண்டு வர முடியாமல் மீட்புக்குழுவினர் தவித்து வருகின்றனர். தற்போது சிக்கியுள்ள அந்த கப்பலினால் கடல் வழிப் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு 2,900 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.