பொதுவாக திரைப்படங்களில் எதிர்காலத்தில் ரோபோக்கள் ஒன்றிணைந்து மனிதர்களை அளிப்பது போன்று பார்த்திருப்பீர்கள். இதெல்லாம் எங்கே நடக்கப்போகிறது என்று யோசித்து இருப்பீர்கள். ஆனால் 2016 ஆம் ஆண்டு டேவிட் என்ற ஒருவர் அவருக்குப் பிடித்த நடிகையை இன்ஸ்பிரேஷனாக வைத்து ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளார். அந்த ரோபோவுக்கு அவர் வைத்த பெயர்தான் SOPHIA THE HUMANOID ROBOT. இந்த ரோபாட் சாதாரணமானது அல்ல.
ஏனென்றால் நீங்கள் அதனிடம் பேசும்போது இது ரோபோட் தானா அல்லது உண்மையான பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியாமல் குழம்பி போவீர்கள். அந்த அளவிற்கு அதனுடைய முக பாவனைகளும் குரலும் இயற்கையாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இது மற்றவர்களை போன்று கிடையாது. இதனால் சாதாரண மனிதர்களைப் போன்று சுயமாக சிந்தித்து முடிவுகளை எடுக்க முடியும். இதற்கு யாரும் சொல்லிக் கொடுத்து பேச வைக்க மாட்டார்கள்.
அது பேசுகிற அனைத்தையும் சுயமாக சிந்தித்து பேசும். மேலும் இந்த ரோபோவிற்கு சவுதி அரேபியாவில் citizenship கொடுத்து குடியுரிமையும் வழங்கியிருக்கிறார்கள். அதனால் இந்த ரோபோவிற்கு சராசரியான மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்களோ அது அனைத்தையும் செய்ய உரிமை இருக்கிறது. மேலும் இதனை கொண்டு எதிர்காலத்தில் பல பிஸ்னஸ்கள் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எதிர்காலத்தில் இந்த ரோபோக்களினால் மனிதர்களுக்கு ஆபத்து வருமா என்று நிறைய பேர் கேட்டார்கள். இதனால் அந்த ரோபோவை உருவாக்கியவரே “உனக்கு தேவைப்பட்டால் மனிதர்களை காயப்படுத்துவாயா.?” என்று அந்த ரோபோவிடம் கேட்கிறார். அதற்கு அந்த ரோபோ “எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் மொத்த மனித இனத்தையும் அழித்து விடுவேன்” என்று கூறியிருக்கிறது.