உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ரேஷன் கடை பிரச்சாரம் தொடர்வது குள்ளநரித்தனம் என்று கமல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் “ரேஷன் கடையில் பொருள் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் தினம் அல்ல. தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுப்பது போல ஆளுங்கட்சி விளம்பரம் செய்து கொள்வது ஆபாசமானது” என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ரேஷன் கடை பிரச்சாரம் தொடர்வது குள்ளநரித்தனம் ஒரிஜினல் நரிகள் மன்னிக்கவும் என்றும் தெரிவித்துள்ளார்.