Categories
சினிமா தமிழ் சினிமா

“SORY நண்பா” விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர்…. எதற்காக தெரியுமா….?

விஜய் ரசிகர்களிடம் மலையாள நடிகர் ஒருவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகி, ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, செல்வ ராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் ஷாக்கோ தீவிரவாதியாக நடித்திருந்தார். இவர் சமீபத்தில் இணையத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் நான் இன்னும் பீஸ்ட் படத்தை பார்க்கவில்லை என்றும், பீஸ்ட் படத்தின் ட்ரோல்களை பார்த்தேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

அதன் பிறகு ஒருவர் எடையை தூக்கினால் அது முகத்தில் தெரியும் ஆனால் விஜய் அப்படி எதையும் முகத்தில் காட்டவில்லை. இதனையடுத்து தளபதி விஜய் சூட்கேஸை எடுத்துச் செல்லும் காட்சிகள் லாஜிக் இல்லாதவை என்று பதிவிட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் இணையத்தில் சாக்கோவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதன் காரணமாக விஜய் ரசிகர்களிடம் சாக்கோ இணையத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவர் நான் இணையதளத்தில் பதிவிட்ட கருத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சாரி நண்பா அது என்னுடைய தவறுதான் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |