Categories
உலக செய்திகள்

வீடு வீடாக நடைபெறும் சோதனை…. அப்பாவி மக்களை கடத்தும் தலிபான்கள்…. தகவல் வெளியிட்ட தற்காலிக தலைவர்….!!

தலிபான்கள் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்களை கடத்தி செல்வதோடு மட்டுமின்றி அவர்களை பயன்படுத்தி தங்கள் வசமமில்லாத பகுதிகளிலிருக்கும் வீடுகளில் சோதனை செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் துணை அதிபர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு பஞ்ஷர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகள் வராமல் உள்ளது. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் தலிபான்கள் நுழைந்தவுடன் அந்நாட்டின் அதிபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் துணைத் அதிபர் தன்னை அந்நாட்டின் தற்காலிக தலைவர் என்று அறிவித்துள்ளார்.

மேலும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்கு வராத பஞ்ஷர் மாவட்டத்திலிருந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக அகமது மசூத் தலைமையிலான படைகளையும் உருவாக்கியுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய தலைவர் தலிபான்கள் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தலிபான்கள் அப்பாவி குழந்தைகள் உட்பட பலரையும் கடத்தி செல்கிறார்கள். மேலும் அவர்கள் கடத்தி செல்லும் மக்களை பயன்படுத்தி தங்கள் வசமில்லாத பகுதிகளிலிருக்கும் வீடுகளுக்கு சென்று சோதனை செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |