இங்கிலாந்தில் 18 பைகளில் நிரப்பப்பட்டு வைத்திருந்த 78 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய 780 கிலோ எடை கொண்ட ஏ வகை போதை பொருட்களை காவல்துறை அதிகாரிகள் சோதனையில் கண்டறிந்துள்ளார்கள்.
இங்கிலாந்தில் Northamton என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள கிடங்கு ஒன்றில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த சோதனையின் முடிவில் அங்கிருந்து 18 பைகளில் நிரப்பப்பட்டிருந்த 78 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய 780 கிலோ எடை கொண்ட ஏ வகை போதைப்பொருட்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள்.
இதுதொடர்பாக போதைப்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை கைது செய்துள்ளார்கள்.