Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சோதனை மேல் சோதனை’…. ராஜஸ்தான் அணிக்கு வந்த நிலை …! பென் ஸ்டோக்ஸ் விலகல் …!!

ராஜஸ்தான் அணியின் வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்த ஐபில் சீசனிலிருந்து  விலகியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பென் ஸ்டாக்ஸ்,ஐபில் போட்டியில் 8 அணிகளுள் ஒன்றான ராஜஸ்தான் அணிக்காக   விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் நடந்த போட்டியில்  பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. அப்போது ராஜஸ்தான் அணிக்காக பேட்டிங்கில் களமிறங்கி பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தின்போது கைவிரலில் அடிபட்டுள்ளது.

இவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் ,என்று கூறியுள்ளனர். இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் ,இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளில்  ராஜஸ்தான் அணியில் பங்குபெற மாட்டார் .ஏற்கனவே  ராஜஸ்தான் அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது , தற்போது பென் ஸ்டோக்ஸ் அணியிலிருந்து விலகியது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவாக உள்ளது.

Categories

Tech |