Categories
உலக செய்திகள்

சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு…. வீராங்கனைகளை நோக்கி சரமாரியாக பாய்ந்து குண்டுகள்…. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு….!!!!

சோதனை சாவடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு வீராங்கனை உயிரிழந்துள்ளார்.

இஸ்ரேல் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் சண்டை நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளான ஜெனின் நகரில் இராணுவ சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு ராணுவ வீரர்கள் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த இடத்திற்கு காரில் வந்த பாலஸ்தீனிய வாலிபர் சோதனை சாவடியில் இருந்த ராணுவ வீரங்கனைகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ராணுவ வீராங்கனை ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்திவிட்டு அந்த வாலிபர் பாலஸ்தீனிய அகதிகள் முகாமுக்குள் சென்று பதுங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் ராணுவம் அவரை வலைவீசி தேடி வருகின்றது.

Categories

Tech |