ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தலீபான் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 24 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள பகுதிகளில் வீரர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தலீபான் அமைப்பினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதில் தலீபான் தீவிரவாதிகள் 24 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் . மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை . மேலும் இதுகுறித்து தலீபான் அமைப்பு தீவிரவாதிகளிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.