உரிய ஆவணமின்றி எடுத்து வந்த வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை அலுவலரிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருப்பதால் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர், தனி தாசில்தாருமான ராஜலட்சுமி, அலுவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் இணைந்த குழுவினர் சர்க்கரை ஆலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டடுள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்ததில் சங்கிலி, கொலுசு மற்றும் காப்பு என ஆறு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 57,000 ரொக்கப் பணம் இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் உரிய ஆவணம் எதுவும் இன்றி வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. மேலும் வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்துள்ளனர்.