அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சூசை நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியில் நின்றிருந்த ஒருவர் கையில் குட்கா பாக்கெட்டை வைத்திருப்பதை பார்த்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அங்குள்ள பலசரக்கு கடையில் புகையிலை வாங்கி சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த கடையில் சோதனை செய்துபோது அங்கு புகையிலை பொருட்களான குட்கா இருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் ராமச்சந்திரபாண்டியன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற குற்றத்திற்காக ராமச்சந்திரபாண்டியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.