அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் சப்ளை தாசில்தாரான பாலகிருஷ்ணன் என்பவர் பள்ளத்தூர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பகுதியில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு நவீன அரிசி ஆலையில் 1டன் எடையுள்ள 23 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அதிகாரிகள் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டனர்.
இந்நிலையில் உணவு கடத்தல் தடுப்பு காவல்துறையினர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக கனகவல்லி, பழனி ஆகியோர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.