“டிஃபெண்டர்” என்ற படத்தில் சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கர் நடிக்கின்றார்.
பிரபல தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் மற்றும் ஜாக் ப்ரொடக்ஷன்ஸ் ஜெகதீஷ் இணைந்து தயாரிக்கும் “டிஃபெண்டர்” என்ற திரைப்படத்தில் சசிகலாவின் சகோதரி மகனான பாஸ்கர் நடிக்கின்றார். இவர் தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் தெர்மாகோல்ராஜா என்ற படத்தில் நடிப்பதாகவுள்ளது. பிறகு அந்த படம் கைவிடப்பட்டது என்றும் இதற்கிடையில் பாஸ்கர் சொத்துக்கு உபயோக வழக்கில் சிறைக்கு சென்று திரும்பியுள்ளார்.
இதனை அடுத்து கமலஹாசன் இடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த திரைப்பட கல்லூரி மாணவனான ரவீந்திரன் இந்த படத்தை இயக்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பேன் இந்தியா படமாக உருவாகவுள்ளது. இது குறித்து அறிவிப்பு இன்னும் சில தினங்களில் தெளிவாக வெளியாகவுள்ளது. இந்தப் படப்பிடிப்பானது ஜனவரி மாதம் தொடங்கியுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.