“ஒலி,ஒளியால் மட்டும் கொரோனாவை ஒழிக்க முடியாது” – முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேக்குது தெரிவித்துள்ளார்.மேலும், கொரோனா தடுப்பு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ” எதிர்க் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம் என்றும் மிகப் பரவலாக, மிக அவரமாக, மிக வேகமாக பரிசோதனை (testing) செய்ய வேண்டும். இதனை அரசு இன்றே தொடங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும்” என கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் குடியரசு தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோருடன் தொலைபேசி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இதே போல் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், தேவகவுடா, சோனியாகாந்தி, முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், சந்தரசேகரராவ், ஸ்டாலின், பிரகாஷ்சிங் பாதல் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.