Categories
சினிமா தமிழ் சினிமா

சௌந்தர்யா ரஜினிகாந்தின் திடீர் மாற்றம்…. அக்காவின் புகைப்படத்தை நீக்கியது ஏன்….?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தின் ப்ரொபைலை திடீரென மாற்றியுள்ளார்.

நடிகர் தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் தங்களது விவாகரத்து குறித்த முடிவை சமூக வலைத்தள பக்கத்தில் சேர் செய்தனர். இதனை அறிந்த சினிமா வட்டாரங்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் பலர் அவர்களின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் தங்கையான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தின் ப்ரோபைலை திடீரென மாற்றியுள்ளார். முன்பு அவரும் அவரது அக்காவும் தனது அப்பாவின் மடியில் அமர்ந்து இருப்பது போல வைக்கப்பட்டிருந்த ப்ரோபைலை தற்போது அவர் மாற்றியுள்ளார்.

Categories

Tech |