புலப்பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய அரசு கண்டு கொள்ள வில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் பிரதமர் மோடி அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஓரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். உரிய போக்குவரத்து வசதி இல்லாமல் சாலைகளில் பல நுறு கிலோ மீட்டர் நடந்தும், சைக்கிளிலும் சென்றவர்கள் பல துயரத்துக்கு ஆளாகினர். பல இடங்களில் மரணமும் கூட நிகழ்ந்தது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. மத்திய அரசாங்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கைகழுவி விட்டது, அவர்களை பாதுகாக்க எந்த ஏற்பாடும் இல்லை என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் இன்று நடந்த மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி, மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அணுகிய விதம் குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து தவிடு பொடியாக விமர்சனங்களை பறக்க விட்டுள்ளார். மோடி பேசும் போது, நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் என்று அனைத்து தரப்பும் 24 மணி நேரமும் உங்களுக்காக செயல்படும். சிறப்பு ரயில்கள் விடுவது, அவர்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்வது ஆகியவற்றை நாங்கள் செய்திருக்கிறோம்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் இந்த காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் மோடி சுட்டிக்காட்டியிருக்கிறார். மோடியின் இந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தொழிலாளர்களை கைவிட்டுவிட்டார் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை என்றெல்லாம் கூறி வந்த நிலையில் தற்போது தொழிலாளர்களுக்காக 24 மணி நேரம் வரை செயல்படுகிறது என்ற விஷயத்தில் பிரதமர் மோடி சுட்டிக்காட்டி பேசியிருப்பது தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக பார்க்கப்படுகிறது.