Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுக் கொண்டார் …..!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி விண்ணப்பித்து இருந்தார். கடந்த 33 மாதங்களாக தலைவர் யாரும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று BCC_யின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக சவுரவ் கங்குலி ஒருமனதாக  தேர்வு செய்யப்பட்டு  பொறுப்பை ஏற்றிருக்கிறார்.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39ஆவது தலைவராக சவுரவ் கங்குலி பதவி ஏற்றுள்ளார். பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்றதால் பிசிசிஐ_யை வழிநடத்த உச்சநீதிமன்றம் நியமித்த குழு காலாவதியாகிவிட்டது.

Categories

Tech |