தென் ஆப்பிரிக்க அணி உலகக்கோப்பையில் களமிறங்கும் வீரர்களை நேற்று அறிவித்தது
2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு ஐ.சி.சி ஏப்ரல் 23 ம் தேதி வரை காலக்கெடு கொடுத்திருந்தது. ஏற்கனவே நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், அணிகள் வீரர்களை தேர்வு செய்து விட்டது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி நேற்று உலக கோப்பையில் களமிறங்கும் வீரர்களை அறிவித்தது.
பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), ஜெ.பி டுமினி, டேவிட் மில்லர், டேல் ஸ்டெயின், பெலக்வாயோ, இம்ரான் தாஹிர், ககிசோ ரபடா, பிரிட்டோரியஸ், குயின்டன் டி காக், ஆன்ரிச் நார்ட்ச், லுங்கி நிகிடி, எய்டன் மார்க்ராம், வான்டெர் துஸ்சென், ஹசிம் அம்லா, தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் இடம் பிடித்தனர்.